Friday 3 December 2010

இயல்பிருத்தல்..!

என் உணர்ச்சிகளை
அள்ளிக் கொண்டதன் பிற்பாடு
சுழன்றடித்துக் கொண்டிருந்தது
சூறைக் காற்று
அது நேற்றும் என்
மௌனங்களைத் தின்றிருந்தது
அழுகையின் விசும்பல்களை
மூக்குறிஞ்சல்களை
குடித்துக் களிப்பேறி
என்னை அணைத்தபடியே
குறட்டை விட்டது
நான் அன்றிரவும்
அந்தக் கனவைக் கண்டேன்
இயல்பிருப்பதாக அறிவிக்கப்பட்ட தெருவொன்றில்
அலைந்து கொண்டிருந்தார்கள்
விபச்சாரர்கள்
என்னை விற்க முயல்வதை
தடுத்து
மீண்டும் மீண்டும்
தோற்றுக் கொண்டிருந்தேன்
கனவு விழிக்கையில்
குறட்டை நின்றிருந்தது
மௌனமாக இருப்பதற்கு முயன்ற போது
கைகள் இயல்பாக மறைத்தன
உடலை....

(காலம் இதழ்..12/2010)

2 comments:

  1. அது நேற்றும் என்
    மௌனங்களைத் தின்றிருந்தது
    அழுகையின் விசும்பல்களை

    nanraaga irukkirathu thozi.

    ReplyDelete
  2. அறியப் படாத திசை நோக்கி
    உங்கள் கவிதை அழைத்துச் செல்கிறது.
    இபோது இங்கே “காலம்” கிடைப்பதில்லை.
    வாழ்த்துக்கள் நதி.

    ReplyDelete