Tuesday 16 November 2010

பயணம்...!!

பேரூந்தின் யன்னலில்
கோட்டோவியம் கிறுக்கிய மழை
மனதை வரைந்தது
புகை மூட்டத்தில் விரல் எழுதிய எழுத்துக்கள்
கரைந்து ஓரமாய் வழிந்தன
நினைவுகளாய்
தகிக்கும் சூட்டில் கலங்கும் கண்களில்
ஆடியபடி சுழன்றது உலகம்
பிதற்றும் குழந்தையும்
அதி குடிகாரனின் கசிப்பு நாற்றமும் ஒன்றேயாக
விலக்கி அமர்த்திய குளிர் காற்றில்
படிகமாய் உறைகிறது
முன்னைய இரவில்
மூடிய விழிக்குள் அழிந்த
இரத்தம் சொட்டும்
வாளேந்திய கையின்
கனவு
தெருவெங்கும் நகர்ந்த
மொட்டை மரங்களின் பின்
முழந்தாளிட்டு
இருட்டை மோகித்து
கையின் உடலைத் தேடி
காமுறுகிறது மனது
தெருவைக் கரைத்தோடிய வெள்ளத்தில்
உடை விலகலை மறந்து
கலைந்து நீந்தியது உடம்பு
வீட்டு நிறுத்தம் வரை...!!

4 comments:

  1. பேருந்துப் பயணத்தைத் தாண்டிச்
    செல்கிறது தங்களின் மனப்பயணம்.
    ரத்தம் சொட்டிய வாள்...
    எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறது.

    ReplyDelete
  2. அழகான விவரணை
    உள்ளம் உணர்வு இரண்டையும் கவர்கிறது

    ReplyDelete
  3. //முழந்தாளிட்டு
    இருட்டை மோகித்து
    கையின் உடலைத் தேடி
    காமுறுகிறது மனது //

    Nice

    ReplyDelete
  4. பேருந்துப்பயணம் எப்பவும் சுகமான ஒரு விஷயம். அதுவும் ஜன்னலோர இருக்கை.. இன்னமும் சுகம்.. அருமையான கவிதை...

    ReplyDelete