என் கனவுகளுக்கான தெரிவுகள்
எப்போதும் மறுக்கப்படுவதை
ஏற்றுக்கொள்ள முடிவதில்லை
என்னால்
நடுநிசி கக்கும் தீப்பிழம்புகள்
விரவி எரிக்கின்றன
கறுப்பு இரவுகளை
வெள்ளைச் சாம்பலில்
வெளுத்துக் கிடக்கிறது
உடம்பு
கடந்து சென்ற காற்று
அள்ளிப் போனது தவிர
கட்டாயப்படுத்தப்பட்ட ஒன்றுக்காய்
தணல்களிடை அவிகிறது
உயிர்
மீள்வது பற்றி ஒன்று
சற்று முன் விரிந்ததைத்
தவறவிட்ட வருத்தத்திலிருக்கிறது
பிய்ந்த விழி
ஆனாலும் திணிக்கப்படும் கனவைத்
தின்று தீர்க்கிறது
கண்ணிமை
//கடந்து சென்ற காற்று
ReplyDeleteஅள்ளிப் போனது தவிர
கட்டாயப்படுத்தப்பட்ட ஒன்றுக்காய்
தணல்களிடை அவிகிறது
உயிர்//
அழகான வரிகள்........
impressive. keep writing.
ReplyDeletelooking forward to the publication of an anthology.
//நடுநிசி கக்கும் தீப்பிழம்புகள்
ReplyDeleteவிரவி எரிக்கின்றன
கறுப்பு இரவுகளை
வெள்ளைச் சாம்பலில்
வெளுத்துக் கிடக்கிறது
உடம்பு//
நல்ல உவமை... நல்ல கற்பனை :)
புத்தாண்டு வாழ்த்துகள்
ReplyDeleteஇந்த மொழியில் வேறு வாசனை
அருமை.
ReplyDelete//திணிக்கப்படும் கனவைத்
ReplyDeleteதின்று தீர்க்கிறது
கண்ணிமை //
மயூ,
வெறுமையின் உச்ச வெளிப்பாடு.
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி....
ReplyDelete