Monday 4 January 2010

என் கனவுகளுக்கான தெரிவுகள்

என் கனவுகளுக்கான தெரிவுகள்
எப்போதும் மறுக்கப்படுவதை
ஏற்றுக்கொள்ள முடிவதில்லை
என்னால்

நடுநிசி கக்கும் தீப்பிழம்புகள்
விரவி எரிக்கின்றன
கறுப்பு இரவுகளை
வெள்ளைச் சாம்பலில்
வெளுத்துக் கிடக்கிறது
உடம்பு

கடந்து சென்ற காற்று
அள்ளிப் போனது தவிர
கட்டாயப்படுத்தப்பட்ட ஒன்றுக்காய்
தணல்களிடை அவிகிறது
உயிர்

மீள்வது பற்றி ஒன்று
சற்று முன் விரிந்ததைத்
தவறவிட்ட வருத்தத்திலிருக்கிறது
பிய்ந்த விழி
ஆனாலும் திணிக்கப்படும் கனவைத்
தின்று தீர்க்கிறது
கண்ணிமை

7 comments:

  1. //கடந்து சென்ற காற்று
    அள்ளிப் போனது தவிர
    கட்டாயப்படுத்தப்பட்ட ஒன்றுக்காய்
    தணல்களிடை அவிகிறது
    உயிர்//

    அழகான வரிகள்........

    ReplyDelete
  2. impressive. keep writing.
    looking forward to the publication of an anthology.

    ReplyDelete
  3. //நடுநிசி கக்கும் தீப்பிழம்புகள்
    விரவி எரிக்கின்றன
    கறுப்பு இரவுகளை
    வெள்ளைச் சாம்பலில்
    வெளுத்துக் கிடக்கிறது
    உடம்பு//
    நல்ல உவமை... நல்ல கற்பனை :)

    ReplyDelete
  4. புத்தாண்டு வாழ்த்துகள்

    இந்த மொழியில் வேறு வாசனை

    ReplyDelete
  5. //திணிக்கப்படும் கனவைத்
    தின்று தீர்க்கிறது
    கண்ணிமை //

    மயூ,

    வெறுமையின் உச்ச வெளிப்பாடு.

    ReplyDelete
  6. உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி....

    ReplyDelete