Tuesday 9 August 2011

செய்திகள்தான் காண்..!!

சிறுமிகளின் கருப்பைகள் நிறைந்த
புதுமைப்படுத்தப்பட்ட பால்ய பருவத்தை
அறிமுகஞ் செய்து நகர்கின்றது
இந்த வாழ்வு
கூடவே
தந்தையின் குறி பயணித்த
மகள்களின் யோனிகளையும்
பிஞ்சுகளை சுவைத்த
மாமன்மார்களையும்
உறவுகளைத் திரித்தெழுதும்
வன்புணர்வுகளையும்

செய்திகளாகிவிட்டவற்றுக்குள்
நிறைந்து கிடக்கும்
ஒரு மனைவியை
ஒரு காதலியை
ஒரு தோழியை
ஒரு கர்ப்பிணியை
ஒரு மகளை
ஒரு சிசுவை
ஒரு "வயோதிகையை"
சான்று காட்டுகிறது
விலங்கில் இருந்தான
மனிதனின் கூர்ப்பு

எப்படியிருந்தும் அச்சேறி விடுகிறது
இன்னொரு செய்தி

13-06-2007

2 comments:

  1. தற்கால சமூகத்தின் நிதர்சனங்கள் உங்கள் வரிகளில்
    உண்மையை உரைத்தீர் நன்றி தோழி

    ReplyDelete