Monday 13 December 2010

நானும் இன்னொன்றாய்...!

மதத்த பொழுதுகளில்
திமுறுதலாகிப் பின் அசைகிறது
உள்ளிருப்பு
தியான வெளிகளின் இடையே விரியும்
குறுகலான ஒற்றையடி பாதையொன்றை
அடியொற்றி நடக்கிறேன்
பிறப்பிலேயே பணிக்கப்பட்டதன்படி
அடுத்த அடியிற்கான பிரயத்தனத்தில்
காற்றில் ஆடும் பாதத்தின்
நொடி நிலை தளும்புதலின் பின்
வெடித்துப் பிளம்புகின்றன எரிமலைகள்
எரி கற்களின் மேல்
உட்கார்ந்தபடி
கரைந்து கொண்டிருக்கும் காகங்களை
அவை அறிமுகப்படுத்துகின்றன
கரு முகிற் கூட்டங்கள்
எனக்கானவை
அவை என்னைப் பொழிபவை
எரி கற்களின் மீதே
வீழ்தலிற்கும் நிலப்படுதலுக்குமான பொழுதில்
நான் காகமாகியிருந்தேன்

- நன்றி காலம் இதழ் (மார்கழி, 2010)

3 comments:

  1. அருமையான உருவகக் காட்சி ஆயிரம் உணர்வுகளை அது உருவான தன்மையினின்று துளியும் கெடா வண்ணம் எடுத்துப் பதித்தவண்ணம்....

    ReplyDelete
  2. kavithai arumai, ithalil velivanthamaikku yenathu vaalththukkal.

    ReplyDelete