Friday 26 February 2010

நிசப்தமையம்

பேசும் நிசப்த
மோனத்தின் மையம்
என் எதிரிருந்தது

தேநீரின் ஆவியும்
மூச்சின் சூடும்
நிறைத்தது போக
மெதுவாகப் பரந்து
விரிந்து சென்றது

மொசைக்கற்களின்
கறுப்புப் புள்ளிகள்
கலைந்து பிரிந்தன
எழும்பிப் பறந்து
காற்றுடன் கதைத்தன

இறங்க முற்பட்டது
ஓவியத்தில் குழந்தை
அதட்டிய அம்மா
சட்டம் பிரித்து
சாடி ரோஜா பிடுங்கினாள்

வாக்குவாதப்பட்டுப் பின்
உடன்படிக்கையாயின
அலையத் தொடங்கியது
வெளிச்சம்
முகட்டில் செறிந்தது
இருட்டு

மூலையில் சிலந்தி
நெய்தலில் இருந்தது
எறும்புகள் இரண்டு
காதலைப் பேசின

யன்னலின் கம்பிகள்
நகர்ந்ததாகப்பட்டது
தென்றலின் ஸ்பரிசத்தில்
விலகியது சேலை

கண்ணிமைத்து விட்டிருந்தேன்
நிசப்தத்தின் மையம்
முற்றாகப் பிளந்தது
முதலில் கறுப்புப்புள்ளிகள்
கீழே விழுந்தன
பேசா நிசப்தம்
சூல் கொண்டது என்னை
இன்னொன்றில் பிரசவிக்க

6 comments:

  1. ஏதேதோ உணர்வுகளை எழுப்புகிறது வரிகள்!!!

    ReplyDelete
  2. .
    மௌனமாய் ஒரு பாராட்டு.

    ReplyDelete
  3. கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete
  4. கவி வரிகளில் ரசிப்பும் ரசனையும் தூள் பறக்கிறது

    ReplyDelete