Saturday 28 November 2009

நினைவு வன்புணர்ச்சி

அகோர நினைவுகளைப் பிரசவித்த
அசிங்கத் தழும்புகள் பல
என் வயிறெங்கும்
நான் மார்பு கிழித்தெறிந்த
அவற்றின் எச்சங்கள் பல
என் வழியெங்கும்

முண்டங்களெல்லாம் சேர்ந்து
முடிவிலியில் சந்திக்கின்றன
பிறிதொரு நாளில் எனை
இம்சிப்பது பற்றியும்
இன்னொரு மன வன்புனர்வுக்கான
இரகசிய ஆயத்தம் பற்றியும்
சூடாகவே விவாதிக்கின்றன

பிண நாற்றங்களிடையில் திமிறி
தன் மூச்சையே தேடும் உயிர்
வெற்று நெஞ்சுக் கூட்டில்
காதல் இருப்பதாகப் பிதற்றுகிறது
அது கனவில் இருக்கிறது

எதிர்பாராத கணத்தில் நடக்கும்
நினைவு வன்புணர்ச்சிகளில்
களைத்துக் கிடக்கிறது மனம்
காதல் பற்றிக் கதைக்க
அவற்றின் வாய் தேடுகிறது

எனினும் நீளும் வலிகளின் போது
முண்டங்களே பிரசவமாகின்றன
அவை முடிவிலியிலேயே தான்
சந்திக்கவும் செய்கின்றன

5 comments:

  1. //என் நதியுலகில்...
    காதலில்லை காயமில்லை
    எந்தன் உலகத்தில்;
    சாதலில்லை உயிர்ப்புமில்லை
    எந்தன் ஆட்சியில்;
    வாழ்ந்து போக நானுமில்லை
    என் உயிர் தவிர;
    ஆள்ந்து போக எவருமில்லை
    என் யாக்கை தவிர; //

    ஏதோ செய்கிறது!!

    ReplyDelete
  2. அதிர்ந்து கொண்டிருக்கிறது மனசு கவிதையி இருந்து வெளி வராமல்

    ReplyDelete
  3. தேவன்மாயம்28 November 2009 at 10:57

    இன்னொரு மன வன்புனர்வுக்கான
    இரகசிய ஆயத்தம் பற்றியும்
    சூடாகவே விவாதிக்கின்றன//

    நதிபோல் வார்த்தைகள் பிரவாகமாய்!!!மிக நன்று...

    ReplyDelete