Thursday 24 September 2009

வா....பிரிவோம்...போ

காதலும் நட்பும்
சந்திக்கும் புள்ளியில்
சமாந்திரங் கீறியது
மனது

அரிதாரங்கள் அப்பி
மறைத்துப் போகலாந்தான்
வழியும் குருதியில்
கோடு கரையுமே?

இதற்குத்தான்
எதிரெதிர்க் கோணங்களைக்
கணக்குப் பார்க்காதே என்றேன் நான்
எப்போதும் சமனாக இருக்காது
அது கீறுவதைப் பொறுத்து

விதிவிலக்குகளும் உண்டு
காமம் கலக்காத காதல்
காதல் கலக்காத நட்பு
முடியாதில்லையா?

என் மனதிற்கு வெள்ளையடிக்கும்
செலவை நீ ஏற்றுக் கொள்ளாதே
அதற்கு முன் எத்தனையோ
கிறுக்கல்களை அழிக்க
உன் ஆயுள் செலவிடவேண்டும்


அதனால் தான் சொல்கின்றேன்

வா
பிரிவோம்
போ

நட்பு அதிலேயே கிடக்கட்டும்
திரும்பினால் தொடர்வோம்

6 comments:

  1. நல்ல நல்ல கவிதைகள்... கலக்குங்க...

    ReplyDelete
  2. காதல் கலக்காத நட்பு
    முடியாதில்லையா?//


    இதில் என‌க்கு உட‌ன்பாடில்லை... "காதல் கலக்காத நட்பு முடியும்"!. ம‌ற்ற‌ப‌டி க‌விதை ந‌ல்லாயிருக்கு.

    ReplyDelete
  3. காதலும் நட்பும்
    சந்திக்கும் புள்ளியில்
    சமாந்திரங் கீறியது
    மனது....

    வாசிக்க மறக்கும் உனது
    வசீகர புன்னகையில் இடை விலகிபோன
    வாழ்வின் வண்ண விளக்கு மறுபடியும்
    என் சிறிய கைகளில் கிடைத்த மகிழ்ச்சி...

    அன்பின் கதைகளில்
    உனது கவிதைகளை ஏன் மை கொண்டு மனதில் வரைகிறாய் என்று எனக்கும் தெரியவில்லை தோழி...

    உனக்காவது தெரியுமா?

    ReplyDelete
  4. @சி. கருணாகரசு - நீங்கள் சொல்வது உண்மைதான். காதல் கலக்காத நட்பு சாத்தியம். ஆனால் நூறில் பத்து அல்லது இருபது வீதம் இருக்குமா?

    ReplyDelete
  5. @ மகேந்திரன் - என் கவிதைகள் பிறர் எண்ணங்களைப் பிரதிபலிப்பதாக இருந்தால் என் கவிதைகளுக்கு உயிர் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

    ReplyDelete