Sunday 13 September 2009

தேவதையின் பத்து வரங்கள் - தொடர் பதிவு.

தொடர் பதிவுக்கு அழைத்தமைக்கு (மாட்டி விட்டதுக்கு) நன்றி கிருத்திகன்
( http://kiruthikan.blogspot.com/ ) கவிதை மட்டுமே எனக்குத் தெரியும். இப்படி யோசிக்க வைத்து விட்டீர்கள்.












பத்து வரங்கள் என்றால்.........

முதலாவது வரம்
பொருள் தேடி என் அப்பா கனடாவில் தொலைந்த போது அப்பவைத்தேடி தொலைந்த என் ஆரம்பப் பருவம் மீண்டும் கிடைக்க வேண்டும்.

இரண்டாவது வரம்
சின்ன வயதிலிருந்து ஒவ்வொரு வருடமும் குடும்பமாக நின்று ஒரு படம்.
(நாம் எல்லோரும் நின்று எடுத்தது )

மூன்றாவது வரம்
என்னோடு கூட இருந்து விட்டு நான் கனடா வந்த ஒரு வருடத்தில் நான் அருகிலிருக்காது போன போது காலன் கவர்ந்த அம்மம்மாவின் உயிர். (ஒரு நொடி போதும், என் பெயர் சொல்லக் கேட்கணும்)

நான்காவது வரம்
நினைத்தவுடன் வரும் கவிதை இப்படியே ஆயுள் முழுதும் வர வேண்டும். (அது உங்களுக்கு கவிதையோ என்னவோ எனக்குக் கவிதை தானே, காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு)

ஐந்தாவது வரம்
நீண்ட இரவு. அதே நிசப்தம். கூட அருகிருக்கக் காதல்.

ஆறாவது வரம்
காதலையே கைப் பிடிக்க வேண்டும். நான் என் சிறு வயதில் நினைத்து ஏங்கிய தந்தைப் பாசம், பதின்ம வயதில் தேடிய அண்ணாவின் பாதுகாப்பு, இப்போது வேண்டும் என்று நினைக்கிற ஒரு ஆறுதலான தோள், இவை எல்லாமுமான கணவன்.

எழாவது வரம்
காதலுக்கு சாட்சியாகக் குழந்தைகள்.

எட்டாவது வரம்
ஆடம்பரமில்லா, மிக அமைதியான வீடு.

ஒன்பதாவது வரம்
கண் மூடினால் கனவு. அது நிஜமில்லை என்று சொல்லும் தூக்கம்.

பத்தாவது வரம்
காதல் அருகிருக்க மரணம்.

இப்ப நான்கு பேரை தெரிவு செய்யணும். தயவு செய்து மன்னியுங்கள். என்னிடம் இருக்கும் வெகு சொற்ப பதிவர்களில் நான்கு பேர். தயவு செய்து திட்டாதீர்கள். நான் கிருத்திகனை வாழ்த்தியது மாதிரி வாழ்த்தி விட்டுப் பதிவு செய்யுங்கள்.
http://anbudanbuhari.blogspot.com/ - அன்புடன் புகாரி
http://manavili.blogspot.com/ - சத்ரியன்
http://nellaikavisasaravanakumar.blogspot.com/ - நெல்லை எஸ்.ஏ.சரவனக்குமார்
http://abragam.blogspot.com/ - ஆப்ரகாம்

11 comments:

  1. வரங்களையும் கவிதைகளாகவே கேட்டிருக்கிறீர்கள்.... நல்லாயிருக்கு

    ReplyDelete
  2. //நான்காவது வரம்
    நினைத்தவுடன் வரும் கவிதை இப்படியே ஆயுள் முழுதும் வர வேண்டும். (அது உங்களுக்கு கவிதையோ என்னவோ எனக்குக் கவிதை தானே, காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு)//

    அதுதான் ஏற்கனவே தங்களுக்கு கிடைத்துவிட்டதே,,

    மற்ற அனைத்தும் கிடைக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.

    நான் சொன்னேன் தானே, எனக்குக் கவிதை மட்டுந் தான் வருமென்று.

    ReplyDelete
  4. வரங்களின் ஊர்வலம் அருமை. அத்தனையும் அழகு

    //கண் மூடினால் கனவு. அது நிஜமில்லை என்று சொல்லும் தூக்கம்//

    வித்தியாசமான முத்திரை

    அன்புடன் புகாரி

    ReplyDelete
  5. உன் கனவுகள் பலிக்கட்டும் என்று சொல்ல என்னால் முடியாது..ஆனாலும் உன் வலிகளை புரிந்து கொள்ளும் ஒரு மனித பிறிவி நான்...வலிகளுடன் வலிமையாக வாழும் உனக்கு என் வாழ்த்துக்கள்...எழுதிக்கொண்டே இரு...

    ReplyDelete
  6. Devathaiyin varangalai poorthi seiyum kadavulaaga iruka aasai :) :)

    ReplyDelete
  7. நன்றி....ஆனால் எனக்குக் கடவுள் நம்பிக்கை அறவே இல்லை... :)

    ReplyDelete
  8. அனைத்தும் கிடைக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. நன்றி மதன் காந்தன் ..

    ReplyDelete