Thursday 12 April 2012

சொல்லெனப்படும் சொல் ..!

குரல்கள் இறைந்து பாயும்
மண்டபத்தில் அமர்ந்திருக்கிறேன்
காண்ணாடி மதில்களில்
வழுக்கித் தோற்கின்றன
உதிர்க்கப்பட்ட சொற்கள்


இன்றைய ஆயிரமாவது சொல்லை
யார் சொல்லியிருக்கக்கூடும்
எந்த மொழியில்?


சிரிப்புக்குள் கரையும் சொற்கள்
காதலில் ஒளியும் சொற்கள்
சலிப்பில் ஒழியும் சொற்கள்
பொய்யில் வெட்கிக்கும் சொற்கள்
சொற்கள்
சொற்கள் மட்டும்

சூடில்லா சூரியன்
நிழலில்லா மரங்கள்
வெளியில்..;
இளவேனிலின் ஈரம்
உடலில்..;
இது/இத்யாதி தவிர்த்து
மனதின் வெப்பியாரத்தை
சொல்லிவிடக்கூடிய ஒரு சொல்
என்னிடமில்லை

சொல்லப்படாத சொற்களில்தான்
உறவுகளின் ஆயுள்
மேலுஞ் சொல்லப்படாத சொற்களே தான்
உறவுகளும்

பின்னே?

உலுக்கி உதறுகிறேன்
என்னை
நேற்றெழுதிய சொல்லில்
ஒன்றில்லை
சொல்லப்படாதவற்றின்
அர்த்தங்களும் நினைவிலில்லை 

@ Seneca College Cafe

12 comments:

  1. தமிழ்க் கவிதையின் புதிய எல்லைப் பரப்புகளில் இயங்குகிறது அருமையான கவிதை நீண்ட நேரம் அசைபோட்டேன் பாராட்டுக்கள்

    ReplyDelete
  2. சொல்லப்படாத சொற்களில்தான்
    உறவுகளின் ஆயுள்
    மேலுஞ் சொல்லப்படாத சொற்களே தான்
    உறவுகளும்

    சிறந்த கற்பனை வளம்!!......
    தொடர வாழ்த்துக்கள் சகோ .

    ReplyDelete
  3. Alakiya kavithai idaikidai kadinamana varikal

    ReplyDelete
  4. வலைச்சரம் மூலமாக தங்களின் வலைப்பூவினைப் பற்றி அறிந்தேன். பாராட்டுகள்.

    ReplyDelete