Saturday 27 March 2010

ஒரே தொழில்

குழைந்த இருட்டு
குதப்பித் துப்பிய வெட்கங்களைத்
தேடத் தொடங்கினாள்
கழற்றி எறிந்த சட்டையுடன்
ஒட்டியபடி கிடந்தது மனது
கட்டில் சட்டத்தில் தொங்கவிட்ட
உணர்ச்சிகள் வரிசைப்பட்டன

மல்லிகைகளால் இவனால்
முழமிடப்பட்டிருந்த முத்தங்கள்
இன்னும் மீதமிருந்தன
கனகாம்பரத்துக்காக அங்கே
அவனால் அளக்கப்படும்
யாருக்குத் தெரியும்
நாளை முத்தச் சுரப்புகள்
சேலையுடன் உரியப்படலாம்

அவளின் உதட்டுச் சாயம் அழித்து
பூவிதழ் தட்டியவனின்
சட்டையின் கட்டங்களிலிருந்து
எம்பிக்கொண்டிருந்தாள்
அவன் மனைவி
அவளின் சாளரத் தாழ்
கயிற்றினால் கட்டப்பட்டிருந்தது

தலையணை தடவி
தாள்கள் எண்ணியவளின்
தேயாத சுவடுகள்
தெருவில் பதிந்தன
அடையாள வேட்கை
அவளை மட்டும் வேசியாக்கியது

விடுதலையாகிய மனைவியுடன்
அதே தொழிலிருந்த
அவனைச் சுட்ட
வார்த்தைகள் தேடுவதை விடுத்து
புணர்தலின் அவசரத்தில்
நிர்வாணப்பட்டிருந்தது
இந்த சமூகம்

14 comments:

  1. இப்படியான வார்த்தைகள் எனக்குள் வராத ஏக்கம் சுடுகிறது. சில உணர்வுகளைச் சொல்ல கவிதை மொழி சாலச் சிறந்தது. உங்களிடம் அது இருக்கிறது மயூரா

    ReplyDelete
  2. ஆத்தீ !!!!

    மனோ ....

    கசிந்தொரு துளி வீழ்ந்து ககனம் பரவிப் பெருமழை சாற்றும் புவனம் சிறு யன்னல் வலை வழியே காணுதலொப்ப
    களரித்தாளமிசைக்கும் சொற்கள்

    ReplyDelete
  3. நன்றி கிருத்திகன்,

    ReplyDelete
  4. நன்றி நேசமித்திரன்

    ReplyDelete
  5. //தலையணை தடவி
    தாள்கள் எண்ணியவளின்
    தேயாத சுவடுகள்
    தெருவில் பதிந்தன
    அடையாள வேட்கை
    அவளை மட்டும் வேசியாக்கியது//

    உங்கள் கவிதைகளில் அழகான ஆழமான வரிகள்.....

    ReplyDelete
  6. அற்புதமான வரிகள் நதியானவள்...நிறைய எழுதுங்கள்.....:)

    ReplyDelete
  7. புணர்தலின் அவசரத்தில்
    நிர்வாணப்பட்டிருந்தது
    இந்த சமூகம்
    kalakkitteenga....!!!
    valikalai varikalaukkul mika elithaai pathiyamidum vitthai ungalukku vasappatirukkirathu,,,
    VAAZHTHUKKAL....!!!

    ReplyDelete
  8. சொல்லிப் புரியாது என் வலி என்பார்கள்..! அனால் உணர்வுகளை வார்த்தைகளில் காட்ட உங்கலால்முடிகிறதே..!

    ReplyDelete