Tuesday 27 October 2009

இலையுதிர்வது - அது காலம்

உதிரும் இலைகளின் வடுக்களைச் சுமந்து
நெடுமென நிற்கிறது கால மரம்
இறைந்து கிடக்கின்ற சருகுகளுடன்
காய்ந்து கிடக்கின்றன மனத் துகள்கள்

பாதி மனதுதான் பாவம்
உச்சியில் கூடு கட்டி
கீழிருக்கும் மீதிக்காய்
ஓர் ஒப்பாரி முடிக்கிறது

எப்போதோ பொழியும் ஒரு மழையில்
துளிர்க்கிறது சிறு தளிர்
இப்போது மனது கீழே பார்ப்பதில்லை
அதற்கு தளிருடன் வேலையிருக்கு

காலமரத்தின் இன்னொரு வளையத்தில்
அது இலையாக உதிர்க்கப் படலாம்
மரத்துக்கு இதைப் பற்றித்
துளியூண்டும் வருத்தமில்லை
மிஞ்சிய மனம்தான் விம்மும்
அடுத்த மழைக்கான காத்திருப்பில்

இன்னொரு ஒப்பாரி இசைக்கும்
அது அடிக்கடி குனிந்து பார்க்கும்

4 comments:

  1. பின்னிட்டீங்க
    Hats off ....!

    ReplyDelete
  2. கவிதை அழகு.. :-)

    ReplyDelete
  3. //காலமரத்தின் இன்னொரு வளையத்தில்
    அது இலையாக உதிர்க்கப் படலாம்//
    வாழ்க்கையின் மொத்த சுழற்சியையு இரு வரியில் அடக்கி விட்டீர்கள்!

    அருமையான வரிகள்! பாராட்டுக்கள்!

    ReplyDelete
  4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....

    ReplyDelete