Friday 30 September 2011

பனிக்குள் தளிர்த்தல்..!!

தேடுதல்கள் நிறைந்திராத காலம் அது
விதந்தோதல்கள் அற்ற
உலகந்தான் எனதாயிருந்தது;
அதிகாலை அறை நிறைக்கும்
முகிழ்த்த மல்லிகையும்
கரு புலரிக்குள் சிவந்திருக்கும்
செவ்வரத்தையும்..

நினைவில் மீந்த
பூச்சியங்களிலிருந்து கடன் வாங்குகிறேன்
ஒன்றை; பின் இரண்டை;

மழை..
ஆம்.! நல்ல மழை;
வெண்ணிறச் சிறகுகளை அசைத்து
அதோ, மேலெழுகின்றன
என் கடல் மணலில்
குந்தியிருந்த பறவைகள்;

சிறகுகளைத் தீட்டும் வர்ணத்தை
வானவில்லும்
இளைப்பாறலுக்காய் தேடும் கிளையை
ஒரு மரமும்

அவ்வாறே எதிர்பார்க்கிறேன்..
பனிக்குள் தளிர்க்கப் போகும்
பதியம் வைத்த செவ்வரத்தையையும்..

1 comment:

  1. புரியவில்லை, புரிந்து கொள்ள முடிகிற அளவு ஞானமும் இல்லை.. மன்னிக்கவும்.. உயர் ரக கவிதை என்று மனதில் படுகிறது... இந்த வார்த்தைக்கு அர்த்தமும் புரியல - "விதந்தோதல்கள்"

    ReplyDelete