Sunday 14 November 2010

ஊரான ஊரிழந்தோம்....!!!!!

வரிகள் - சேரன் உருத்திரமூர்த்தி
பாடியவர் - திவ்வியராஜன்

ஊரான ஊரிழந்தோம்..
ஒற்றைப் பனைத் தோப்பிழந்தோம்..
பாராள வந்தவரே
உம்மையுந்தான் நாமிழந்தோம்.

பொன்னான மேனியிலே -- ஒரு
பொல்லாப்பு வந்ததில்லை
கண்ணான மேனியிலே - எவர்
கண்ணூறும் பட்டதில்லை

ஊரான ஊர் இழந்தோம்..........!!!

ஆற்றோரம் மணல் மேடு
மணல் மேட்டில் பட்டிப்பூ
பட்டிப்பூ பூத்திருக்கு
யார் வரவைப் பார்த்திருக்கு...
யார் வரவைப் பார்த்திருக்கு...
யார் வரவைப் பார்த்திருக்கு....!

ஊரான ஊர் இழந்தோம்
ஒற்றைப் பனைத் தோப்பிழந்தோம்
பாராள வந்தவரே
உம்மையுந்தான் நாமிழந்தோம்...

பொன்னான மேனியிலே -- ஒரு
பொல்லாப்பு வந்ததில்லை
கண்ணான மேனியிலே - எவர்
கண்ணூறும் பட்டதில்லை
கண்ணூறும் பட்டதில்லை ...
கண்ணூறும் பட்டதில்லை....!

ஊரான ஊர் இழந்தோம்...

கடலே இரையாதே
காற்றே நீ வீசாதே
நிலவே எரியாதே
எம் நெஞ்சம் எல்லாம் தீயாச்சே
நெஞ்சம் எல்லாம தீயாச்சே
நெஞ்சம் எல்லாம் தீயாச்சே....!!!

ஊரான ஊரிழந்தோம்
ஒற்றைப் பனைத் தோப்பிழந்தோம்
பாராள வந்தவரே
உம்மையுந்தான் நாமிழந்தோம்..!!


7 comments:

  1. //ஊரான ஊரிழந்தோம்
    ஒற்றைப் பனைத் தோப்பிழந்தோம்
    பாராள வந்தவரே
    உம்மையுந்தான் நாமிழந்தோம்..!!//

    இந்த வரிகள் சிலவற்றை புரியவைக்கிறது .. என்றாலும் ஒருநாள் ஈழம் மலர்ந்தே தீரும் ...

    ReplyDelete
  2. ஊரிழந்த சோகம்
    விழி நீர் ஊறவைக்கிறது.

    ReplyDelete
  3. இராசமோகன்14 November 2010 at 12:45

    வாழ்க வளமுடன்
    வலிகள் புரிகிறது....
    என்னினும் இனி இதுபோன்ற பாடல்களை யாரும் புனையவேண்டாம். எமது அன்பான வேண்டுகோள். யாரும் எதையும் இழந்துவிடவில்லை. எல்லாம் இருக்கிறது. எல்லோரும் இருக்கிறார்கள்.தன்னம்பிக்கை மிளிரும் வரிகள் பீறிட்டெழ உத்வேகமூட்டும் கவிகளை புனைவோம். ஈழம் இருக்கிறது. அது எங்கும் செல்லவில்லை.வெற்றி நமதே !

    ReplyDelete
  4. இந்தப் பாடல் இப்போது புனையப்பட்டதல்ல.. ஈழத்துக் கவிஞர் சேரனின் ஆரம்ப காலத்தில் எழுபதுகளில் எழுதப்பட்டது..!!!! வலியை எழுத்தில் கொட்டுவதில் தவறொன்றும் இல்லை அது தான் வலிகளை சொல்லும் வழியாக இருக்கும் பட்சத்தில்...!!!!!

    ReplyDelete
  5. இந்தப் பாடல் .. கண்கசியக் கேட்ட காலமுண்டு

    ReplyDelete
  6. எல்லாம் கனவாகப் போனதுபோல் இருக்கின்றது ஆனாலும் விரைவில் விடியும். அதுதான் உலக நியதி.

    ReplyDelete