Tuesday 26 October 2010

வாழ்தலில்....!

1.

சிறுமியின் நாட்குறிப்பேட்டின்
அந்நிய மொழி பெயர்ப்பில்
தவறவிடப்பட்ட மென்னுணர்வுகள் போல்
விம்மித் திரிகின்றன
நேற்றும், நேற்று முன்தினமும்
சிறு துவாரத்தூடு துரத்தி
அடைத்து சாத்திய பின்னும்
யன்னல் கண்ணாடியில்
மூச்சுக் காற்று எழுதிப்போகிறது
இன்னொரு நாளை
அதைப் போலவே..!!

2.

பரப்பிக் கிடக்கும் உடலின் மேல்
அடித்து வீசுகிறது குளிர் காற்று
குத்திடும் உரோமக் கால்களின்
நொடி சிலிர்ப்பின் பின்
அடித்துத் திருத்தப்படுகிறது
"காதல்"
தெரு கழுவிய மழையின் பின்
மொட்டையாக இருந்தது மரம்
மண்ணிற இலையொன்றின்
கடைசி நொடியின் பின்..!!

3.

பெருந்தெருக்களின்
கறுப்புகளைக் கழுவித் தோற்கும்
மழைத்துளிகள் மேல் வைத்த காதலில்
கொஞ்சம் மீதமிருக்கிறது;
அதை நான் உனக்குத் தருவேன்..
மஞ்சள் மரமொன்று நேற்றையதைவிட
இன்று இன்னும் மஞ்சளாயிருக்கிறது
என்று பிசத்திக் கொண்டிருந்தேன்
நீ கேட்பது போல இருந்தாய்;
எனக்கு அது பிடித்திருந்தது
அதனால் முத்தம் தருவதற்கும் சித்தமாயிருக்கிறேன்
உயிரை சுழற்றி சுற்றி எரியும்
தீயின் கரங்களில் குளிர்காய்கிறேன் இப்போது
என்னை மீட்டெடு;
நான் உன்னைக் காதலிப்பதாகக் கூட சொல்லுவேன்
எனக்கு வார்த்தைகள் எப்போதுமே வார்த்தைகள் தான்
பல வேளைகளில்...!

8 comments:

  1. நல்ல கவிதை .. சொற்கள் இசையாக்கும் தருணங்கள் அழகு

    ReplyDelete
  2. மயோ பெரிய பிள்ளையாகிக் கொண்டு வருகிறாள்.. :))

    அழகுடா..

    ReplyDelete
  3. அந்நிய மொழி பெயர்ப்பில்
    தவறவிடப்பட்ட மென்னுணர்வுகள் போல் ...
    உயிரை சுழற்றி சுற்றி எரியும்
    தீயின் கரங்களில் குளிர்காய்கிறேன் இப்போது..

    மிக வசீகரம் நதி.

    ReplyDelete
  4. உங்கள் வரிகள் தேன் சுவைத் தமிழ் கவிதையும் அழகு

    ReplyDelete
  5. ஒருமுறை வாருங்கள் என் வலைப்பூ nathikkarail.blogspot.com க்கு!! நன்றி!!

    ReplyDelete
  6. கவிதை அழகு...

    www.vaasikkalaam.blogspot.com

    ReplyDelete
  7. கவிதையில் கவிதை துளிர் விட்டது அழகாக இருக்கிறது...வாழ்த்துக்கள்

    ReplyDelete