பேசும் நிசப்த
மோனத்தின் மையம்
என் எதிரிருந்தது
தேநீரின் ஆவியும்
மூச்சின் சூடும்
நிறைத்தது போக
மெதுவாகப் பரந்து
விரிந்து சென்றது
மொசைக்கற்களின்
கறுப்புப் புள்ளிகள்
கலைந்து பிரிந்தன
எழும்பிப் பறந்து
காற்றுடன் கதைத்தன
இறங்க முற்பட்டது
ஓவியத்தில் குழந்தை
அதட்டிய அம்மா
சட்டம் பிரித்து
சாடி ரோஜா பிடுங்கினாள்
வாக்குவாதப்பட்டுப் பின்
உடன்படிக்கையாயின
அலையத் தொடங்கியது
வெளிச்சம்
முகட்டில் செறிந்தது
இருட்டு
மூலையில் சிலந்தி
நெய்தலில் இருந்தது
எறும்புகள் இரண்டு
காதலைப் பேசின
யன்னலின் கம்பிகள்
நகர்ந்ததாகப்பட்டது
தென்றலின் ஸ்பரிசத்தில்
விலகியது சேலை
கண்ணிமைத்து விட்டிருந்தேன்
நிசப்தத்தின் மையம்
முற்றாகப் பிளந்தது
முதலில் கறுப்புப்புள்ளிகள்
கீழே விழுந்தன
பேசா நிசப்தம்
சூல் கொண்டது என்னை
இன்னொன்றில் பிரசவிக்க
ஏதேதோ உணர்வுகளை எழுப்புகிறது வரிகள்!!!
ReplyDelete.
ReplyDeleteமௌனமாய் ஒரு பாராட்டு.
:)
ReplyDeleteஅருமை மயோ
ReplyDeleteகருத்துக்களிற்கு நன்றி.
ReplyDeleteகவி வரிகளில் ரசிப்பும் ரசனையும் தூள் பறக்கிறது
ReplyDelete