Wednesday 18 November 2009

தானே தொலையும் நான்

தான் அடிக்கடி தொலைவதாக
அலட்டிக் கொண்டேயிருந்தது
"நான்"

நாலு பேருக்குள்
கலையும்"நான்" யாரென்பது தான்
எனக்கு விளங்கவேயில்லை

என் ஆழமனங் கிழித்து
எழுந்து பறக்கும் அதற்கு
தீனி போடுகிறது கூட்டம்

நெரிசலுக்குள் நின்று
நெக்குருகவே அது பெரும்
பிரயத்தனப்படுகிறது

அதற்கு கூட்டம் வேண்டும்
சிரிக்க
அழ

தான் தூங்கும் போதும்
கூடவர நிழலுக்கு
உத்தரவிட்டிருந்தது

திரளும் கூட்டம் தன்னை
தானறியாமலேவிளுங்குவதாகப்
பின்னர் கூறியது

சனத்துக்குள் சனமாகிப்
பிணமாகிப் போனேன் என்று
இருந்துவிட்டு அழவும் செய்கிறது

தொலைத்ததும் தொலைக்கப்படுவதும்
தொலைப்பதும் தொலைக்க இருப்பதும்
தன்னாலே அது தன்னுள்ளே என்ற
பரம உண்மை அறியாது

மரங்கள் பிசாசுகளாகும்
நடுநிசியில் விழித்திருந்து
"நான்"அடிக்கடி தொலைவதாக
அலட்டிக் கொண்டேயிருக்கிறது
"நான்"

5 comments:

  1. சனத்துக்குள் சனமாகிப்
    பிணமாகிப் போனேன் என்று
    இருந்துவிட்டு அழவும் செய்கிறது///

    நான் பற்றிய உங்கள் கருத்துக்கள் அருமை!!

    ReplyDelete
  2. ம்ம்ம்...

    புத்தகங்களை துணைக்களைத்துக்கொள்ளலாம்..

    ReplyDelete
  3. கவிதை உங்களின் தனிப்பட்ட திறமை .வாழ்த்துக்கள் நேரம் இருந்தால் என் தளத்துக்கு ஒரு தடவை வாருங்கள் http://mycamerafotos.blogspot.com/

    ReplyDelete
  4. //தொலைத்ததும் தொலைக்கப்படுவதும்
    தொலைப்பதும் தொலைக்க இருப்பதும்
    தன்னாலே அது தன்னுள்ளே என்ற
    பரம உண்மை அறியாது//

    வாழ்க்கை தத்துவம்! அழகு!

    ReplyDelete
  5. இந்த பாமரனுக்கு தங்களின் ஆழ்ந்த சிந்தனையுள்ள கவிதைகள் ஏனோ மிக கடினமாக உள்ளது. சிரமப்பட்டு புரிந்து கொள்ள முயலும் பொழுது அதற்கு
    ரசிப்பு தன்மை குறைந்து விடுகிறது.

    ReplyDelete