Thursday 12 November 2009

இன்னொருகொலை

அந்தகாரத்தில் நடுங்கிக் கிடக்கிறது நரகம்
விநாடியில் விலகுந் தாழியினூடு பரவி
நசுக்கிப் போடுகிறது இவ்வுலக ஒளியை

திமிறிப் பரவுகிறது காமநெடி
திடுக்கிடுவதோடு பழக்கமாகிறது எனக்கு
மூச்சடைக்கிறது என் பூமி

மூச்சிறுகிய போதும் நான் சற்றுமுன்னும்
அதைத்தான் முகர்ந்தேன்
"அவனுடன்" தான் பேசினேன்

என் சந்துகளெல்லாம் இறந்து கிடக்கிறார்கள்
"அவன்கள்
ஏன் நான் நேற்றுக் கொன்ற அவனின் நட்பும்

செத்துக் கிடக்கும் பிணமொன்று
சட்டென்று விழிக்கும் இன்னொரு உலகில்
மௌனத்தில் பழகிய பெண்
அமிழ்வாள், அடங்குவாள், அழிவாள்

அவளுடலின் புழு நெளியக் கிடக்கும்
"பெண்ணியம்"
துடைக்க வரும் இன்னொரு
"பெண்கள் தினம்"

ஏதாவது செய் என்பதல்லால்
இரத்தம் வடிகிறது மனதில்
ருத்திரம் கொதிக்கிறது மூச்சில்

பிணத்தில் வடியும் குருதியில்
குளிர்கிறது என் பூமி
அது தான் கொலை செய்வதென்றானேன்

மீண்டும் நிரம்பும் என் பூமி
"அவன்களின்" காம நெடிகளால்
அதைத்தான் சுவாசிக்க வேண்டும் நான்

இன்னொரு கொலை தானே செய்யலாம்
இந்த மிருகம் விழிக்கக் கூடாது
இன்னொரு உலகில்

5 comments:

  1. மிக சரளமான எழுத்து நடை, அற்புதமாக இருக்கிறது உங்கள் பதிவு.

    ReplyDelete
  2. ஏனம்மா இந்த ருத்ரம்?

    பெண்கள் உண்மையான பெண்ணீயத்தை புரிந்து கொண்டால்தான் இவர்களும் மாறுவர்.

    ReplyDelete
  3. //இன்னொரு கொலை தானே செய்யலாம்
    இந்த மிருகம் விழிக்கக் கூடாது
    இன்னொரு உலகில் //

    கவிதை அழகு! உங்கள் கோபம் அவசியம்!

    ReplyDelete
  4. தன்னை காத்துக்கொள்ள தனதாய், சிலதை படைத்தான் இறைவன்.

    ReplyDelete
  5. உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

    ReplyDelete