Tuesday 27 October 2009

என் ஒரு நாள்

ஒன்றுமே செய்யாமல் போனதற்காய்
ஓவென்று அழும் நொடிகளால்
நிரம்பிக் கிடக்கிறது
என் அறையின் குப்பைத் தொட்டி

நேற்றயதுகளில் புதைந்த
இன்றயதுகளுக்கான மனதைத்
தேடி தொலைந்தேனென்று
தாம் தூமென்று குதிக்கிறது பாதி நாள்

தவணை சொல்லி மீண்டெழுந்தால்
கழியும் கணங்கள் போக
மீதியில் வாழும் லாவகங்கள்
கைவரவில்லை உனக்கென்று
குற்றம் சுமத்துகிறது மீதி

அப்படியா என்று நான்
கேட்டு அழ முன்னமே
பிறந்துவிடுகிறது
எனக்கான அடுத்த நாள்

11 comments:

  1. ஏதுமற்ற நாள் நிரப்பிய தாள் அருமை

    ReplyDelete
  2. /////அப்படியா என்று நான்
    கேட்டு அழ முன்னமே
    பிறந்துவிடுகிறது
    எனக்கான அடுத்த நாள்/////

    நன்றாய் இருக்கிறது தொடர்ந்து எழுதுங்கள் ...............

    ReplyDelete
  3. வெறுமையை வெளிப்படுத்திய விதம் அருமை!

    ReplyDelete
  4. All your poems are wonderful. Wishes and keep writing.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. ////ஒன்றுமே செய்யாமல் போனதற்காய்
    ஓவென்று அழும் நொடிகளால்
    நிரம்பிக் கிடக்கிறது
    என் அறையின் குப்பைத் தொட்டி //

    நதியா,

    ஒரு நாளுக்கே இவ்வளவா? இங்கே, ஒன்றுமே செய்யாமல் ஆயுளைக் கழிப்பவர்களை என்ன செய்யலாம்?

    கவிதை அருமை.

    ReplyDelete
  7. மிக இலாவகமான சொல்லாடல் தோழி...

    வாழ்த்துகள்

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  8. உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  9. //ஒரு நாளுக்கே இவ்வளவா? இங்கே, ஒன்றுமே செய்யாமல் ஆயுளைக் கழிப்பவர்களை என்ன செய்யலாம்?//

    தலைப்பிலேயே அதைத் தெளிவுபடுத்திவிட்டேன். "என்" ஒரு நாள் என்று.

    ReplyDelete
  10. உங்கள் அனைவரது வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்.

    ReplyDelete