Sunday 12 September 2010

மஞ்சள் தொடு வானம்...!

மாலை மழையின் துளிகள்
குமிழ்த்திருந்தன
கர்ப்பவதியின் வெட்கத்துடன்
இளஞ்சிவப்பு இலைகள்

அந்திச் சூரியனின் மஞ்சளில்
பள பளத்துக் கொண்டிருந்தது
ஈரத் தெரு

மேப்பிள் மரம்
சிறு மழை பொழிந்தது
கொன்றை நினைவுக்கு வந்தது
மஞ்சள் பூக்கள்
நிறமற்ற மொட்டுக்களாய்
நடந்தேன்

கூதல் காற்றின்
தழுவலில்
விகசித்து சிவந்தது
முகம்

நின்றேன்
கிளைகளூடு கசிந்து பரவியது
ஒரு ஒளிக் கீற்று
வெளித்துக் கொண்டு வந்தது
வானம்
அதன் மஞ்சளை எடுத்துப் பூசுவதாய்
ஒரு கனவு விரிந்தது

மெல்லப் பிரிந்த இதழ்கள்
எதற்காகவோ
புன்னைகைத்துக் கொண்டேயிருந்தன

நான் மீண்டும் நடக்கத் தொடங்கியிருந்தேன்
சொற்ப தூரத்தில்
வானம்....!!

4 comments:

  1. வர்ணனை அருமை

    ReplyDelete
  2. மீண்டும் நடக்கத் தொடங்கியிருந்தேன்
    சொற்ப தூரத்தில்
    வானம்....!


    நன்று மனோ

    ReplyDelete
  3. நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்

    ReplyDelete