Monday 4 January 2010

பெயரில்லாதது

தனிமையில் கரைந்து போன
நிலாவின் ஒளி
ஒழுகிக் கொண்டிருந்தது

நாணல்களுக்குள் பூத்த
பெயரறியாப் பூவில்
பொறித்துப் போனது
தன் பெயரை

அடுத்து விரிந்த மொட்டுக்கள்
அதைக் காதல்
என்று உச்சரித்தன

4 comments:

  1. உச்சரித்த வார்த்தைகள்...உதிரும் முன்...

    மிச்சமுள்ள வாழ்கையை காண்கிறேன் கனவில்...

    கவிதை அருமை, வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. ஆகா.. கவிதை... கவிதை..

    ReplyDelete
  3. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.....

    ReplyDelete